‘சுவாச பிரச்னை தீர வேண்டுமா? பசுக்களை தடவி விடுங்கள்’ : உத்தரகாண்ட் முதல்வர் பேச்சு!

 

‘சுவாச பிரச்னை தீர வேண்டுமா? பசுக்களை தடவி விடுங்கள்’ : உத்தரகாண்ட் முதல்வர் பேச்சு!

சுவாச பிரச்சனைகள் தீர பசுவைத் தடவிவிட்டால் போதும் என்று உத்தரகண்ட் முதல்வர்  திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்

உத்தரகாண்ட் : சுவாச பிரச்சனைகள் தீர பசுவைத் தடவிவிட்டால் போதும் என்று உத்தரகண்ட் முதல்வர்  திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.

cow

உத்தரகாண்ட் மாநிலத்தில் விழாவொன்றில் பசுவின் பால் மற்றும் சிறுநீரின் மகத்துவம் தொடர்பாக உத்தரகண்ட் முதல்வர்  திரிவேந்திர சிங் ராவத் பேசிய வீடியோ ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், பசுமட்டும்தான் ஆக்சிஜனை உள்வாங்கி வெளியிடுகிறது. அதனால் பசுவை தடவினால் சுவாச பிரச்சனைகள் தீரும். பசுக்களுடன் நெருக்கமாக வாழ்ந்து வந்தால், காசநோய் பிரச்னையே இருக்காது. பசுக்கள் 80% ஆக்சிஜனை வெளியிடுவதாக இத்தாலிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. சாதாரண மனிதன் வெளியிடும் ஆக்சிஜன் ஏழு ஆதி தூரம் தான் செல்லும், ஆனால்  பசுக்கள் வெளியிடும் ஆக்சிஜன் 42 ஆதி தூரம் செல்லும். இது எங்களின் நம்பிக்கை’ என்று பேசியுள்ளார். 

up

முன்னதாக உத்தரகாண்ட் பாஜக தலைவரும் நைனிடால் சட்டமன்ற உறுப்பினருமான அஜய் பட், கர்ப்பிணிப் பெண்கள் பாகேஸ்வர் மாவட்டத்தில் உள்ள கருத் கங்கா என்ற நதியின் நீரைக் குடித்தால் சிசேரியன் பிரசவத்தைத் தவிர்க்கலாம் என்று சில நாட்களுக்கு முன் பேசியது குறிப்பிடத்தக்கது.