சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு புதிய வீடுடன் ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!

 

சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு புதிய வீடுடன் ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!

வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து வரிசையாக நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகியது. இதில், வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நேற்று அப்பகுதியில் இருக்கும் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து வரிசையாக நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகியது. இதில், வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின் அவர்களது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ttn

இந்த சம்பவம் குறித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், புதிய வீடு கட்டித் தர வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று எடப்பாடி  பழனிசாமி ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது அந்த நிதியுதவி உயர்த்தப்பட்டு தலா ரூ.10 லட்சம் வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி,  சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கும் புதிய வீடு கட்டித்தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கும் புதிய வீடு கட்டித்தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.