சுற்றி போனாலும் போவேன்…..மலேசியாவுக்கு போகும்போது இந்திய வான்வெளியை பயன்படுத்த மாட்டேன்….இம்ரான் கான் முடிவு…

 

சுற்றி போனாலும் போவேன்…..மலேசியாவுக்கு போகும்போது இந்திய வான்வெளியை பயன்படுத்த மாட்டேன்….இம்ரான் கான் முடிவு…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று நாள் பயணமாக மலேசியா செல்கிறார். இந்திய வான்வெளியை பயன்படுத்தாமல் அங்கு செல்ல முடிவு அவர் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜம்மு அண்டு காஷ்மீரில் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய விமான படையின் போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தீவிரவாத முகாம்களை அளித்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது.

மஹாதிர் முகமது

பாகிஸ்தான் கடந்த ஆண்டு பல சமயங்களில் இந்திய குடியரசு தலைவர் ராம நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்திய தலைவர்களின் வெளிநாட்டு பயணங்களின்துபோது, தங்களது வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி மறுத்தது. இதனையடுத்து இந்த விவகாரத்தை சர்வதேச விமானபோக்குவரத்து அமைப்பிடம் இந்தியா கொண்டு சென்று சென்றது.

இந்திய தலைவர்களின் விமானங்களுக்கு அனுமதி மறுப்பு

இந்நிலையில், மலேசிய பிரதமர் மஹாதிர் முகமதுவின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் பயணமாக இன்று அங்கு செல்கிறார். மலேசியா செல்வது இந்திய வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என இம்ரான் முடிவு செய்துள்ளதாக தகவல். காஷ்மீர் விவகாரத்தை மனதில் வைத்தே அவர்  முடிவு செய்துள்ளதாக தகவல்.