சுர்ஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான பகீர் தகவல் 

சுர்ஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான பகீர் தகவல் 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 80 மணி நேரப் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டு அவரது உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேத பரிசோதனை அறிக்கையிலிருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 80 மணி நேரப் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டு அவரது உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேத பரிசோதனை அறிக்கையிலிருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25 ஆம் தேதி மாலை  5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் உயிரிழந்தான்.  5 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்றிரவு 2.30 மணியளவில் சுர்ஜித் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டு பின் பிரேத பரிசோதனைக்கு முடிவுற்றபின் நல்லடக்கம் செய்யப்பட்டது.  கடந்த சில நாட்களாக 88 அடி குழிக்குள் இருந்த சுர்ஜித் மேலும் கீழே சென்றுவிடக்கூடாது என்பதற்காக் அவரது கைகள் ஏர்லாக் மூலம் பிடிக்கப்பட்டிருந்தது. ஆனால் சுர்ஜித் மீட்கப்பட்டவுடன் அவரது முகம் மற்றும் உடல்கள் யாருக்கும் காட்டப்படவில்லை.

sujith family

இந்நிலையில் சுர்ஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில், “ சுர்ஜித்தின் கைகள்  சுமார் 2 நாட்களாக ஏர்லாக் மூலம் பிடிக்கப்பட்டிருந்ததால் அவரது கை உடைந்து விட்டதாகவும், உடலின் கீழ் பகுதியில் உறுப்புகள் ஏதும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் குழந்தையின் முகத்தில் எந்த காயங்களும் இல்லை என கூறப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ரகசிய அறையில் வைத்து சுர்ஜித்தின் பெற்றோருக்கு மட்டும் அவரது உடல் காண்பித்த மருத்துவர்கள், சுர்ஜித் இறந்தது எப்பது என்பதை கூற மறுத்துவிட்டனர்.