சுய ஊரடங்கால் நாளை மதுரையில் நடக்கவிருந்த 24 திருமணங்கள் ஒத்திவைப்பு.. வருத்தத்தில் காதல் ஜோடிகள்!

 

சுய  ஊரடங்கால் நாளை மதுரையில் நடக்கவிருந்த 24 திருமணங்கள் ஒத்திவைப்பு.. வருத்தத்தில் காதல் ஜோடிகள்!

திருமணங்கள் ஒத்தி வைக்கபட்டுள்ளது காதல் ஜோடிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக, மக்கள் கூட்டத்தை தவிர்க்குமாறு மத்திய அரசும் மாநில அரசும் வலியுறுத்தி வருகின்றன. அதனை கருத்தில் கொண்டு அனைத்து வணிக வளாகங்கள் , பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன . நேற்று முன்தினம் மக்களிடம் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 3 முதல் 4 வாரங்களுக்கு அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் மிகவும் ஆபத்தான சூழலில் இந்தியா இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

ttn

தொடர்ந்து பேசிய அவர், 22 ஆம் தேதி மக்கள் அனைவரும் முன்வந்து சுய ஊரடங்கு முடிவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பிரதமரின் அந்த உரையாடல், நம் நாட்டு மக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய அபாயத்தை எடுத்துரைத்தது. பிரதமரின் சுய ஊரடங்கு முடிவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக பால் விநியோகம் செய்யப்படாது என்றும் காய்கறி கடைகள் அன்று அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கபட்டது. அதே போல தமிழக அரசும் 22 ஆம் தேதி அதாவது நாளை அரசு பேருந்துகள் செயல்படாது என்றும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்றும் தெரிவித்தது.

ttn

நாளை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையில் நடைபெறவிருந்த 24 திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸை ஒழிக்கும் இந்த நடவடிக்கை மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியிருப்பினும், திருமணங்கள் ஒத்தி வைக்கபட்டுள்ளது  காதல் ஜோடிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.