சுய உதவிக்குழு கடனால் தீக்குளித்த இரண்டு பெண்கள்: போட்டா போட்டியால் நடந்த விபரீதம்!?

 

சுய உதவிக்குழு கடனால் தீக்குளித்த இரண்டு பெண்கள்: போட்டா போட்டியால் நடந்த விபரீதம்!?

கடனைத் திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், கடனைக் கொடுத்தவரும் கடன் வாங்கியவரும் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாகர்கோவில் : கடனைத் திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், கடனைக் கொடுத்தவரும் கடன் வாங்கியவரும் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை  சேர்ந்தவர் சங்கரகுமார். இவருடைய மனைவி அம்பிகா. 55 வயதான அம்பிகா சுயஉதவிக் குழு ஒன்றில் தலைவியாக இருந்துள்ளார். இவர் குழுவில் தங்கம் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடனாக 4 லட்சம் வாங்கியுள்ளார். இதையடுத்து கடனை தங்கம் திரும்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது, இதனால் அம்பிகாவுக்கும் தங்கத்துக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

burn

இந்நிலையில் நேற்று கடனை திருப்பி தருவதாகத் தங்கம் கூறியதையடுத்து அம்பிகா உஷா என்ற பெண்ணை அழைத்துக் கொண்டு தங்கத்தின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.ஆனால்  வழக்கம் போல் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாது என்று கூறி அம்பிகாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார் தங்கம். ஒருகட்டத்தில் இவர்களின் சண்டை அதிகரிக்கவே தங்கம் மண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறி ஊற்றிக் கொண்டார். இதனால் அம்பிகாவும் உனக்கு கடன் கொடுத்த பாவத்திற்கு நானும் செத்துப் போகிறேன் என்று கூறி மண்ணெண்யை உடலில் ஊற்றிக் கொண்டார். இதை கண்ட உஷா, தண்ணீர் கொண்டு வர வீட்டின் பின்புறம் சென்று வருவதற்குள்  தங்கம் நெருப்பை பற்றவைத்துக் கொண்டுள்ளார். தீயானது அருகிலிருந்த அம்பிகா மீதும் பரவியது.இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உஷா, தீயை அணைக்க முயன்றார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் ஓடிவந்து தீயை அணைத்தனர். 

suicide

இந்த சம்பவத்தில் அம்பிகாவும், தங்கமும் பலியானார்கள். இது குறித்து நேசமணிநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.