சும்மா விடுவாரா மோடி… பெரும் சிக்கலில் கார்த்திக் சிதம்பரம்..!

 

சும்மா விடுவாரா மோடி… பெரும் சிக்கலில் கார்த்திக் சிதம்பரம்..!

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைத்தால் உடனடியாக எம்.பி பதவி காலியாகும் என்பதால் நிச்சயம் சிவகங்கை தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்புகள் அதிகம்.

2014 – ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற மோடி கருப்பு பணத்தை மீட்டு வருவேன் என வக்குறுதி அளித்திருந்தார். அதனை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை இந்திய நிதி துறை அமைச்சகம் ஈடுபட்டது.கார்த்தி

அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் வளர்ச்சியை குறைத்து ஊழலை ஊக்குவிக்கும் வகையில் திருட்டு வழியில் சம்பாதித்த பணத்தை பலர் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்திருப்பதாகவும், அவர்களின் பெயர்களை தரவேண்டும் என்றும் சுவிஸ் வங்கி நிர்வாகத்திடம் முறையிட்டது.

இதனை ஏற்று முதல்கட்டமாக பல்வேறு நபர்களின் பெயரை இந்திய அரசிற்கு அளிப்பதற்காக சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருபவர்களின் முழு விவரங்களை அனுப்பி வைக்குமாறு வங்கி நிர்வாகம் இந்தியாவில் உள்ள 11 பேருக்கு நோட்டீஸ் ஒன்றை கடந்த 21-ம் தேதி அன்று அனுப்பியுள்ளது.சிதம்பரம்

இதில் பலர் தங்களின் பெயரை வங்கியில் தெரிவிக்காமல் இனிசியலை பயன்படுத்தி வங்கியில் கருப்பு பணத்தினை பதுக்கி இருப்பது தெரியவந்துள்ளது.

Mrs A S B K (born November 24, 1944), Mr A B K I (born July 9, 1944), Mrs P A S (born November 2, 1983), Mrs R A S (born November 22, 1973), Mr A P S (born November 27, 1944),MR P C K (born November 16, 1971), Mrs A D S (born August 14, 1949), Mr M L A (born May 20, 1935), Mr N M A (born February 21, 1968) and Mr M M A (June 27, 1973). 

இதில் P C K என்னும் இனிசியல் KARTI CITHAMBARAM ஆக இருக்கலாம் என்றும் அச்சு அசலாக அவர் பிறந்த தேதியான 16.11.1971 அன்றை சரியாக குறிப்பிட்டிருப்பதால் இது நிச்சயம் கார்த்தி சிதம்பரமாக இருக்கும் என்று பாஜகவினர் நம்புகின்றனர். அவர்கள் நம்புவதுபோல் அது கார்த்தி சிதம்பரமாக இருந்தால் நிச்சயம் கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.மோடி
 
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைத்தால் உடனடியாக எம்.பி பதவி காலியாகும் என்பதால் நிச்சயம் சிவகங்கை தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்புகள் அதிகம். இதுமட்டுமல்லாமல் கார்த்தி மீது பல்வேறு வழக்குகளும் நிலுவையில் இருப்பதால் எப்படியும் இடைத்தேர்தல் வருவது உறுதி என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே பேசி கொள்கிறார்கள்.