‘சும்மா கிழி’ தர்பாரின் ஃபஸ்ட் சிங்கிள்…அனிருத் கொடுத்த அப்டேட்!

 

‘சும்மா கிழி’ தர்பாரின் ஃபஸ்ட் சிங்கிள்…அனிருத் கொடுத்த அப்டேட்!

இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக  நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த்  காவலராக நடித்துள்ள  இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

darbar

ஏற்கனவே தர்பார் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. அந்த வரிசையில்  மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம்   நடிகர் ரஜினிகாந்த்தும்  டப்பிங் பணிகளை  முடித்து விட்டார். 

darbar

இந்நிலையில் தர்பார் படத்தின் முதல் பாடல் நவம்பர் 27-ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து அனிருத் வெளியிட்டுள்ள வீடியோவில், சும்மா கிழி என்று தொடங்கும் இந்தப் பாடலை  எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக  தர்பார் திரைப்படம் வரும்  பொங்கலன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது   குறிப்பிடத்தக்கது.