சுமார் 80 ஆண்டு கால நடைமுறையை மாற்ற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு….

 

சுமார் 80 ஆண்டு கால நடைமுறையை மாற்ற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு….

சுமார் 80 ஆண்டுகளாக ஜூலை-ஜூன் காலத்தை நிதியாண்டாக பின்பற்றி வந்த நடைமுறையை, ரிசர்வ் வங்கி மாற்ற முடிவு செய்துள்ளது.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில், 1867 முதல் ஏப்ரலில் தொடங்கி மார்ச் மாதத்துடன் முடியும் வகையில் நிதியாண்டு கடைப்பிடிக்கபட்டு வந்தது. நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் அந்த நடைமுறையை நம் அரசுகள் கைவிடவில்லை. சுமார் 150 ஆண்டுகளாக ஏப்ரல்-மார்ச் காலத்தைதான் மத்திய மற்றும் மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன. 

சக்திகந்த தாஸ்

அதேசமயம் 1935ல் தொடங்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி, ஜூலை-ஜூன் காலத்தை நிதியாண்டாக  கொண்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றி இந்த நடைமுறையைதான் மாற்ற இந்திய ரிசர்வ் வங்கி தற்போது முடிவு செய்துள்ளது. 

நாடாளுமன்றம்

இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குனர்கள் குழு வாரியத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு உபரி நிதி மற்றும் டிவிடெண்டாக மொத்தம் ரூ.1.76 லட்சம் கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், தனது நிதியாண்டு காலத்தை ஏப்ரல்-மார்ச்சாக மாற்றவும் இயக்குனர்கள் சம்மதம் தெரிவித்தனர். சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக ரிசர்வ் வங்கி தனது நிதியாண்டை ஜூலை-ஜூன் காலமாக கொண்டு செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கியல் ஆண்டை மத்திய அரசுடன் இணைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.