சுமார் தான் குமாரு…விஷாலை கலாய்த்த ஸ்ரீரெட்டி: இதுவாவது உங்க அக்கவுண்ட்டா மேடம்!

 

சுமார் தான் குமாரு…விஷாலை கலாய்த்த ஸ்ரீரெட்டி: இதுவாவது உங்க அக்கவுண்ட்டா மேடம்!

இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.  இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்துள்ள ஆக்‌ஷன் படம் நேற்று  வெளியாகியுள்ளது. டெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்ய லக்ஷ்மி, யோகி பாபு உள்ளிட்ட  பலர்  நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.  இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

sri

இந்நிலையில் விஷாலுடன் ஆரம்பம் முதலே மல்லுக்கட்டி வரும் ஸ்ரீரெட்டி விஷாலின் ஆக்‌ஷன் படத்தின் மூலம் சினிமா விமர்சகராகியிருக்கிறார்.  இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், விஷாலின் படம்  சராசரிக்கும் குறைவாக உள்ளது.

vishal

பாவம், சாரி விஷால் ரெட்டி’ என்று பதிவிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள், அவரை ஏம்மா சுமா வம்பிழுக்குற என்று விஷாலுக்கு வக்காலத்து வாங்கியுள்ளனர்.

ஏற்கனவே உதயநிதி குறித்து கசமுசா போஸ்ட் போட்டுவிட்டு, தற்போது நான் உதயநிதியை நேரில் பார்த்தது கூட இல்லை. அது எனது டிவிட்டர் கணக்கு இல்லை, போலியான கணக்கு என்று கூறி அந்தர் பல்டி அடித்தார். இதனால் தற்போது விஷாலின் ஆக்‌ஷன் படம் குறித்த இந்த பதிவாவது உண்மையான பதிவா அல்லது அட்மின்/போலி அக்கவுண்டில் வந்தது என்று மறுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.