சுபஸ்ரீ விபத்துக்குள்ளான பகுதிக்கு அருகே பேனரால் ஏற்பட்ட மற்றொரு விபத்து: இளைஞர் படுகாயம்!

 

சுபஸ்ரீ விபத்துக்குள்ளான பகுதிக்கு அருகே பேனரால் ஏற்பட்ட மற்றொரு விபத்து: இளைஞர் படுகாயம்!

சுபஸ்ரீ விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிலே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னை: பள்ளிக்கரணையில் வைத்திருந்த பேனரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் தவறி விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

suba

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் நிலைதடுமாறி விழுந்ததில் அவருக்குப்  பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து இதையடுத்து  திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளும், நடிகர்களும் இனி  எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேபோல் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்றும் பணியில் மாநகராட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

suba

இந்நிலையில் பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் முன்பாக பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. சுமார் 50 உயரம் கொண்ட அந்த பேனரை அகற்றும் பனியின் போது, ராஜேஷ் என்ற 30 வயது இளைஞர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவர் பலத்த காயமடைந்தார். 

banner

இதுகுறித்து கூறியுள்ள பள்ளிக்கரணை போலீசார், சுபஸ்ரீ விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிலே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.  அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை’ என்று  கூறியுள்ளனர்.