சுதந்திர போராட்ட வீரரின் கதையை படமாக்கும் கோபி நயினார்!

 

சுதந்திர போராட்ட வீரரின் கதையை படமாக்கும் கோபி நயினார்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தின் மூலம் சினிமா ரசிகர்களின் கவன் ஈர்த்தவர் இயக்குநர் கோபி நயினார்.

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தின் மூலம் சினிமா ரசிகர்களின் கவன் ஈர்த்தவர் இயக்குநர் கோபி நயினார்.

‘அறம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் பணிகளில் கோபி நயினார் தீவிரமாக உள்ளார். இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளையும் கோபி நயினார் துவக்கியுள்ளார்.

பழங்குடி இன சுதந்திர போராட்ட வீரரான பிர்ஸா முண்டா என்பவரின் கதையை தான் அடுத்ததாக கோபி நயினார் இயக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. வட இந்தியாவைச் சேர்ந்த பிர்ஸா முண்டா, நாட்டின் சுதந்திரத்துக்காகவும், பழங்குடி இன மக்களுக்காகவும் போராடி இளம் வயதிலேயே உயிர் நீத்தார்.

birsamunda

ஆங்கிலேயர்களை விரட்ட பல புரட்சிகளை செய்த பிர்ஸா முண்டா, வட நாட்டில் நன்கு அறியப்படுபவர். இவரது வாழ்க்கை வரலாற்றை இயக்கவிருப்பது குறித்து பேசிய கோபி நயினார், ‘ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களுக்கு எதிராக பல செயல்களில் ஈடுபட்ட பிர்ஸா முண்டா, பற்றிய கதையை எழுதி முடித்துவிட்டேன். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதைக்காக கடந்த 2 ஆண்டுகளாய் பல்வேறு ஆவணங்களை திரட்டி இருக்கிறேன். இது ஒரு பெரிய பட்ஜெட் படமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

gopinainar

மேலும், பிர்ஸா முண்டாவின் கதை குறித்து தகவல் சேகரிக்க வட இந்தியாவிற்கு செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், உச்ச நட்சத்திரம் ஒருவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஜெய் படத்தின் பணிகள் முடிந்தவுடன், பிர்ஸா முண்டா பற்றிய படத்தின் வேலைகள் ஆரம்பமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.