சுதந்திர தின உரையிலும் தோற்றுப்போன பாகிஸ்தான்: வெறுப்பை விதைத்த இம்ரான் கான்! மக்கள் நலனில் ஆர்வம் காட்டிய மோடி

 

சுதந்திர தின உரையிலும் தோற்றுப்போன பாகிஸ்தான்: வெறுப்பை விதைத்த இம்ரான் கான்! மக்கள் நலனில் ஆர்வம் காட்டிய மோடி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் தனது சுதந்திர தின உரையில் முழுக்க முழுக்க இந்தியாவை தாக்கி பேசியிருந்தார், அதேசமயம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் ஒரு வார்த்தை கூட பாகிஸ்தானை குறிப்பிடவில்லை.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சுதந்திர தினம் முறையே ஆகஸ்ட் 14 மற்றும் 15ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இருநாடுகளிலும் சுதந்திர தினத்தன்று பிரதமர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை ஆற்றுவார்கள். பொதுவாக சுதந்திர  தின உரையில் அரசின் செயல்பாடு மற்றும் திட்டங்கள் போன்றவற்றை குறித்துதான் பேசுவார்கள். ஆனால், இந்த முறை பாகிஸ்தான் பிரதமர் தனது சுதந்திர தின உரையில் இந்தியாவை தாக்கி பேசி இருந்தார்.

இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் அந்நாட்டு மக்களுக்கு 40 நிமிடம் சுதந்திர தின உரையாற்றினார். அந்த உரையில், இந்தியா விமான படை நடத்திய பாலகோட் தாக்குதல், தாங்கள் ஆக்ரமித்து வைத்து இருக்கும் காஷ்மீர் பகுதியில் இந்தியா பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. காஷ்மீர் பிரச்சினையை உலக அரங்குக்கு கொண்டு செல்வேன் என இந்தியா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் நரேந்திர மோடி ஆகியோரை மட்டுமே பேசி இருந்தார்.

நரேந்திர மோடி

அதேசமயம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது 92 நிமிட சுதந்திர உரையில் மறந்தும் கூட பாகிஸ்தானை குறிப்பிடவில்லை. தண்ணீர், டிஜிட்டல் இந்தியா முதல் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என நாட்டு மக்களின் நலன் மற்றும் விருப்பங்கள் குறித்தே பேசி இருந்தார். ஒரு நாட்டு தலைவரின் உரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பிரதமர் மோடியின் உரை அமைந்து இருந்தது.

அதேசமயம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் உரை முழுக்க முழுக்க வெறுப்பை அந்நாட்டு மக்களிடம் விதைக்கும் வகையில் இருந்தது.