சுதந்திர தினத்தில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி… கலப்பு உரங்களின் விலை குறைந்தது…

 

சுதந்திர தினத்தில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி… கலப்பு உரங்களின் விலை குறைந்தது…

இப்கோ நிறுவனம் கலப்பு உரங்களின் விலையை ரூ.50 (மூடைக்கு) குறைத்துள்ளது. இதனால் விவசாயிகளின் செலவினம் கணிசமான அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விவசாயிகள் கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) உரங்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. 35 ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக  5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு தனது சேவைகளை இப்கோ நிறுவனம் வழங்கி வருகிறது. 

கலப்பு  உரம்

இந்நிலையில், இப்கோ நிறுவனம் டை அமோனியம் பாஸ்பேட் (டி.ஏ.பி.) உள்ளிட்ட கலப்பு உரங்களின் விலையை ரூ.50 (மூடைக்கு) குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக இப்கோ அறிவித்துள்ளது.

கலப்பு உரங்கள்   புதிய விலை      பழைய விலை
                                (மூடைக்கு) 
டி.ஏ.பி.                    ரூ.1,250                ரூ.1,300       
என்.பி.கே.1           ரூ.1,200                ரூ.1,250       
என்.பி.கே.2           ரூ.1,210                ரூ.1,260
என்.பி.                    ரூ.950                   ரூ.1,000

கலப்பு உரம்

இப்கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யு.எஸ். அவஸ்தி இது குறித்து கூறுகையில், 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தைத இரட்டிப்பாகும் பிரதமரின் இலக்கை நிறைவேற்ற விவசாயிகளின் வளர்ச்சி மற்றும் நன்மைக்காக கூட்டுறவு தொடர்ந்து பணியாற்றும் என்று கூறினார்.