சுதந்திர இந்தியாவின் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த ஒரே மனிதர் யார் தெரியுமா?

 

சுதந்திர இந்தியாவின் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த ஒரே மனிதர் யார் தெரியுமா?

இந்தியாவின் முதல் வாக்காளர் சியாம் சரன் நேகி வரும் மே 19 ஆம் தேதி தொடர்ந்து 17 – ஆவது முறையாக  வாக்களிக்க உள்ளார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பான முதல் மக்களவை தேர்தல் கடந்த 1951 – ஆம் வருடம் அக்டோபர் மாதம் நடந்தது. அப்போது முதன் முதலில் வாக்களித்தவர் இமாசல பிரதேசத்தை சேர்ந்த சியாம் சரன் நேகி என்பவர் ஆவார். சியாம் அன்று முதல் ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து வாக்களித்து வருகிறார்.

first voter

இந்நிலையில், தற்போது 17 ஆம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சியாம் சரண் நேகி இமாசலப் பிரதேசத்தில் உள்ள கல்பா பகுதியில் வாக்களிக்க உள்ளார். 101 வயதான சியாம் சரன் நேகி இது வரை ஒரு முறை கூட வாக்களிக்கத் தவறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.