சுண்டைக்காய் சொல்லும் ஆரோக்கிய ரகசியம்

சுண்டைக்காய் சொல்லும் ஆரோக்கிய ரகசியம்

மருத்துவ மூலிகையாக பாவிக்கப்படும் சுண்டைக்காய் கசப்புச் சுவை உடையது. மூர்த்தி சிறியதாக இருப்பினும் இதன் கீர்த்தி பெரிது. கசப்பாக இருந்தாலும் இது நம் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளோ இனிப்பாகத் தான் இருக்கும். சுண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் நம் குடலில் உள்ள புழுக்கள் இறந்து விடுகிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சுண்டைக்காய் அபரிமிதமாக வேலை செய்கிறது. உடலுக்கு தேவையான எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

sudakkai

சுண்டைக்காயோடு மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து கொடுத்தால் சிறு குழந்தைகளின் குடலில் இருக்கும் கிருமிகள், பூச்சிக்கடி விஷம் ஆகியவை நீங்கும். சுண்டைக்காயை நசுக்கி மோரில் ஊற வைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்தி வைக்கலாம். இதை எண்ணெயில் வறுத்தும் சாப்பிடலாம். அல்லது குழாயில் வற்றலாகவும் உபயோகிக்கலாம். சுண்டைக்காய் மார்புச் சளியைப் போக்கும். குடலில் உள்ள கசடுகளை நீக்கும். சுண்டைக்காயில் புரதம் கால்சியம், இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் தாராளமாக உண்ணலாம். வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டாலே இரத்தம் சுத்தமடையும் உடற்சோர்வு நீங்கும். அடிக்கடி உணவில் சேர்த்து வர சுவாசம் சம்பந்தப்பட்ட தாக்குதலுக்கு உட்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். சுண்டைக்காயை நசுக்கி, அதனுடன் பூண்டு ,சின்னவெங்காயம், மிளகு, சீரகம் கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து கொதிக்க விட்டு சூப்பாக சாப்பிடலாம். இதனால் கபக்கட்டு இருமல், மூலச்சூடு , தொண்டைக்கட்டு முதலியவை போயே போய்விடும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்க வல்லது. ஆஸ்துமாவிற்கு இது கண்கண்ட மருந்தாகும். சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை, பிண்ணாக்கு சம அளவு எடுத்து இழுத்துப் பொடி செய்து முகர்ந்து பார்த்தால் இழுப்பு நோய் வெகுவாக தணியும்.

sudukkai

இனி வாரத்திற்கு ஒரு நாள் என்று முறை வைத்து உங்களது உணவில் சுண்டைக்காய் பயன்படுத்த துவங்குங்கள். இதுவரையில் உங்கள் குழந்தைகள் உணவைக் கண்டாலே காத தூரத்திற்கு ஓடிச் சென்ற காலம் எல்லாம் மலையேறி, சத்தான உணவுகளை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளாமல் ஆர்வமுடன் சாப்பிட ஆரம்பிப்பார்கள். காரணம், நாவில் இருக்கும் சுவை நரம்புகளைத் தூண்டி விடும் அற்புத செயலையும் சுண்டைக்காய் செய்கிறது.