சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயிலில் வெளியே செல்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கு தான் இது!

 

சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயிலில் வெளியே செல்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கு தான் இது!

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் வருகிற மே மாதம் 4-ம் தொடங்கி 29-ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக பொதுவாக கருதப்பட்டு வந்தாலும், கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. மேலும் ‘ஃபானி’ புயல் காரணமாக தமிழகத்துக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் திசைமாறி சென்றது. இப்புயல் நிலப்பரப்பில் இருந்து ஈரப்பதத்தை இழுத்து செல்லும் என்பதால், வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் வருகிற மே மாதம் 4-ம் தொடங்கி 29-ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கத்திரி வெயிலின் போது கூடுமான அளவிற்கு, மதிய வேளையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே சென்றாலும், செய்ய வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது,

சன் ஸ்கிரீன்

sun cream

சன் ஸ்கிரீன் வெயிலில் செல்லும் 15-20 நிமிடங்களுக்கு முன்பே சன் ஸ்க்ரீன் தடவ வேண்டும். இதனால் சருமமானது அந்த க்ரீம்மை உறிஞ்சி, சருமத்தை சூரிய ஒளியால் கருமையடையாமல் பாதுகாக்கும்.

எலுமிச்சைக்கு நோ

lemon

எலுமிச்சை சருமத்திற்கு நல்லது தான். ஆனால் வெளியே வெயிலில் செல்லும் முன் சருமத்திற்கு எலுமிச்சையைப் பயன்படுத்த வேண்டாம். அப்படியே பயன்படுத்தினால் 2-3 மணிநேரம் கழித்து வெளியே செல்லுங்கள். இல்லாவிட்டால், சருமத்தில் வெடிப்புக்கள் மற்றும் பருக்கள் வர ஆரம்பிக்கும்.

முகப் பருக்கள்

pimple

உங்கள் முகத்தில் பருக்கள் இருந்தால், அந்த பருக்களை சூரிய ஒளி நேரடியாக படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், சூரிய ஒளியின் தாக்கத்தினால் பருக்கள் உடைந்து, அதனால் முகத்தில் பருக்கள் அதிகமாகிவிடும்.

கூந்தல் பாதுகாப்பு

hat

வெயிலில் செல்லும் போது கட்டாயம் கூந்தலுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும். சூரிய ஒளி நேரடியாக கூந்தலில் படுமாயின், கூந்தல் தனது இயற்கையான நிறத்தை இழப்பதோடு, அதிக வறட்சியடைந்து தனது மென்மைத்தன்மையை இழந்துவிடும்.

தண்ணீர் பாட்டில்

heat wave

நீங்கள் எப்போது வெளியே சென்றாலும் கூடவே தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொள்வது நல்லது. வெயிலினால் உடலில் நீர் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதால், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். அத்துடன் முகத்தை அடிக்கடி கழுவுவதும் நல்லது.

உடைகள்

summer dress

கோடைகாலத்தில் நல்ல காற்றோட்டம் தரக்கூடிய பருத்தி ஆடைகள், லினன் ஆடைகளை அணிவது நல்லது. பெரும்பாலும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

கூலிங் கிளாஸ்

coolers

கூலிங் கிளாஸ் முக்கியம் சூரிய ஒளி சருமத்திற்கு மட்டுமின்றி, கண்களுக்கும் ஆபத்தானது. எனவே வெயிலில் செல்லும் போது கண்களுக்கு பாதுகாப்பு தரும் கூலிங் கிளாஸ் அணிய வேண்டும். இதனால் கண்களில் தொற்றுக்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.