சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ வில்சனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார் முதல்வர் !

 

சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ வில்சனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார் முதல்வர் !

எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.  

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியாற்றி வந்த எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். 
அதில் அவருக்குத் தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்தும் உடலின் சில பகுதியில் கத்திக்குத்து காயங்களும் ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி காவல்துறையினர். இதனிடையே அவரை சுட்டுக் கொன்ற நபர்களின் புகைப்படமும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. 

ttn

இந்த சம்பவம் குறித்து கேரளா காவல்துறை அளித்த தகவலின் பேரில், தமிழக தனிப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். வெளியான சிசிடிவி காட்சிகள் மூலம், அப்துல் சமீம், தஃவ்பீக் என்ற இரண்டு பேர் தான் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. அந்த குற்றவாளிகளைக் கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு ரூ.7 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்றும் காவல்துறையினர் அறிவித்தனர். 

tth

முன்னதாக, எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.  அதன் படி, இன்று வில்சனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடியை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதனை, வில்சனின் மனைவி மற்றும் 2 மகள்களிடம் ரூ.1 கோடி நிதியை தலைமைச்செயலகத்தில் பெற்றுக் கொண்டனர்.