சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் !

சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் !

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியாற்றி வந்த எஸ்.ஐ வில்சன் பணியில் இருந்த போது அவரை இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்தனர் .

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியாற்றி வந்த எஸ்.ஐ வில்சன் பணியில் இருந்த போது அவரை இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்தனர் .

ttn

அதில் அவருக்குத் தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்தும் உடலின் சில பகுதியில் கத்திக்குத்து காயங்களும் ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி காவல்துறையினர். இதனிடையே அவரை சுட்டுக் கொன்ற நபர்களின் புகைப்படமும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. 

ttn

சுட்டுக் கொல்லப்பட எஸ்.ஐ வில்சன் கிட்டத்தட்ட  36 ஆண்டுக்காலம் பணியாற்றியவர். இந்த சம்பவம் குறித்து கேரளா காவல்துறை அளித்த தகவலின் பேரில், தமிழக தனிப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ வில்சன் ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார், அதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என்று காவல்துறையினர் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், அவரது மரணத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.