சுஜித்தை மீட்க முடியாதது வேதனை அளிக்கிறது : குழிக்குள் இறங்கவிருந்த வீரர் குமுறல்..!

 

சுஜித்தை மீட்க முடியாதது வேதனை அளிக்கிறது : குழிக்குள் இறங்கவிருந்த வீரர் குமுறல்..!

சிறுவனை மீட்க பல முயற்சிகள் மேற்கொண்டும், சுஜித் உயிருடன் மீண்டு வரவில்லை. 

கடந்த 25 ஆம் தேதி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சுஜித்தை மீட்கத் தீயணைப்புத் துறை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்ட பல மீட்புக் குழுக்கள் வரவழைக்கப்பட்டன. பல்வேறு கட்ட முயற்சிகளும் கை கொடுக்காததால், கடைசியாக மற்றொரு குழி தோண்டி வீரர்களை அதில் இறக்கி அதன் மூலம் சுஜித்தை மீட்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

Sujith

குழிக்குள் இறங்குவதற்காக 3 தீயணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 45 அடி குழி தோண்டிய உடனேயே, தீயணைப்புப் படை வீரர் நகைமுகன் உள்ளே இறங்கி, இதற்கு மேல் பாறை உள்ளதா என்று சோதித்து பார்த்துவிட்டு மேலே வந்தார். சிறுவனை மீட்க பல முயற்சிகள் மேற்கொண்டும், சுஜித் உயிருடன் மீண்டு வரவில்லை. 

Fire service

சுஜித்தின் மரணம் குறித்து பிரபல செய்தி நிறுவனத்திடம் நகைமுகன் கொடுத்த பேட்டியில், ‘குழிக்குள் இறங்குவதற்கு வீரர்கள் தேர்வு செய்யப்படும் போது, ஏற்கனவே நான் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்ததால், நான் இறங்கி சுஜித்தை மீட்கிறேன் என்று உறுதியாகத் தெரிவித்தேன். 45 அடி குழி தோண்டிய போதும் அதற்கு மேல் பாறை உள்ளதா என்று சோதிக்க நான் குழிக்குள் இறங்கினேன். அப்போது அங்குக் கடினமான பாறைகள் இருந்ததை என்னால் உணர முடிந்தது. சுஜித்தை மீட்டு விடுவார்கள் என்று லட்சக் கணக்கான மக்கள் எங்களின் மீது வைத்த நம்பிக்கையை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. சுஜித்தை மீட்க முடியாததால், பசி, தூக்கமின்றி குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருக்கிறோம்’ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.