சுஜித்தின் குடும்பத்தினருக்கு தேமுதிக சார்பில் ரூ.1லட்சம் நிதியுதவி – பிரேமலதா விஜயகாந்த்

 

சுஜித்தின் குடும்பத்தினருக்கு தேமுதிக சார்பில் ரூ.1லட்சம் நிதியுதவி – பிரேமலதா விஜயகாந்த்

மணப்பாறை அருகே, நடுக்காட்டுபட்டியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று விளையாடிக் கொண்டிருந்த போது ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் தவறி விழுந்தான்.

மணப்பாறை அருகே, நடுக்காட்டுபட்டியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று விளையாடிக் கொண்டிருந்த போது ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் தவறி விழுந்தான். 4 நாட்களாகச் சிறுவனை மீட்கப் போராடிய மீட்புக் குழு, இன்று காலை சுஜித்தின் உடலை அழுகிய நிலையில் மீட்டது. சுஜித்தின் மரணம், அவனுக்காகப் பிரார்த்தித்த அனைத்து மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியது. மீட்கப்பட்ட சுஜித்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின், நல்லடக்கம் செய்யப்பட்டது.

குழந்தை சுஜித் நல்லடக்கம் செய்த இடத்தில் தேமுதிக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் சுஜித்தின் தாய் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், தேமுதிக சார்பில் அவர்களது குடும்பத்துக்கு ₹ 1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

sujith

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “2 வயது குழந்தை சுஜித்தின் மரணம் உலகையே உலுக்கியுள்ளது. சுஜித்தின் மரணம் எல்லாருக்குமான பாடமாக அமைய வேண்டும். ஆழ்துளை அமைப்பவர்கள் பொறுப்போடு அதனை மூட வேண்டும். எல்லா ஆழ்துளை கிணறுகளையும் மூடுவதற்கு தமிழக அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எத்தனை கோடி நிதி  கொடுத்தாலும் சுஜித்தின் இறப்பிற்கு  ஈடாகாது. சிறுவனை மீட்க மாவட்ட நிர்வாகம் கடுமையாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

தமிழக அரசும் சுஜித்தை உயிரோடு மீட்டெடுக்க கடுமையாக போராடியுள்ளது. சுஜித் உயிரோடு வந்திருந்தால் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இருந்திருக்கும். குறை சொல்வதை விட இதனை பாடமாக எடுத்துக்கொண்டு இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார்.