சுசீந்திரன் இயக்கும் ‘கென்னடி கிளப்’-பட குழு நெனச்சது ஒண்ணு ;நடந்தது வேறொண்ணு!?

 

சுசீந்திரன் இயக்கும் ‘கென்னடி கிளப்’-பட குழு நெனச்சது ஒண்ணு ;நடந்தது வேறொண்ணு!?

வாய்ப்பிருந்தால் இருக்கிற அத்தனை விளையாட்டு போட்டிகளையும் மையமாக வைத்து படம் எடுத்து விட்டுத்தான் சொந்த ஊருக்கு திம்புவதாக சபதம் எடுத்திட்டுதான் சென்னை பஸ் ஏறி யிருப்பார் போல இயக்குனர் சுசீந்திரன்!

வாய்ப்பிருந்தால் இருக்கிற அத்தனை விளையாட்டு போட்டிகளையும் மையமாக வைத்து படம் எடுத்து விட்டுத்தான் சொந்த ஊருக்கு திம்புவதாக சபதம் எடுத்திட்டுதான் சென்னை பஸ் ஏறி யிருப்பார் போல இயக்குனர் சுசீந்திரன்! வரிசையாக விளையாட்டு சம்பந்தமாகவே படம் எடுத்து தள்ளுகிறார்!?

சுசீந்திரனின் அப்பா சிறந்த கபடி வீரர்தான். அவர் நடத்திய குழுவின் பெயர்தான் வெண்ணிலா கபடி குழு.அவர் டீமுக்கு ஏற்பட்ட அனுபவங்களை வைத்துதான் முதல் படமான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தை எடுத்தார். அதன் பிறகு ஒன்றிரண்டு படங்கள் மட்டும் வேற கதைகளை பண்ணினார்.

மறுபடியும் யூ டர்ன் அடித்து கிரிக்கெட், பேஸ்கெட் பால்,ஃபுட்பால், ஒரு சுற்று கோல் போட்டுவிட்டு மீண்டும் பெண்கள் கபடியை முன்னிறுத்தி எடுக்கும் படம் கிட்டத்தட்ட முடியப்போகிறது. செண்டிமெண்டாக முதல் படம் படமாக்கப்பட்ட தனது சொந்த ஊரான கணக்கம்பட்டியில்தான் ‘கென்னடி கிளப்’ படத்தின் முக்கால்வாசி படத்தை எடுத்திருக்கிறார்.

kennady club

சசிக்குமார் ஹீரோ. பாரதிராஜா கபடி கோச். இந்தப் படத்திற்கும் ரியலான பெண்கள் கபடி குழுவைச் சேர்ந்த வீரர்களை கூட்டி வந்து நடிக்க வைத்திருக்கிறார். படம் வெளியானால் நாங்களும் இந்தப் படத்தில் நடிச்சிருக்கோம்னு அந்தப் பெண்கள் சொல்லிக்கலாம் என்று பட குழு நினைத்திருக்கக்கூடும்!

அந்தப் பெண்களால் ‘கென்னடி கிளப்’ படத்திற்கு பப்ளிசிட்டி எகிறியிருக்கிறது என்பதுதான் ஹைலைட்! படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் நிஜமாக கோப்பையை தட்டிக்கொண்டுவந்திருக்கிறது அந்த டீம்.

பொதுவாக கபடி பிளேயர்கள் பெரிதாக கருதுவது தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையைத்தான். இந்த கோப்பையின் மதிப்பு ரூ.12,00,000 ரூபாய். வருடந்தோறும் மாவட்ட வாரியாக நடைபெற்று, இறுதிச் சுற்றில் வெற்றி பெரும் அணிக்கு இந்த கோப்பையை வழங்குவது வழக்கம். அதைத்தான் ‘ரியல் வெண்ணிலா குழு’ தட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

வாழ்த்துகள் மக்கா!