சுங்கத்துறை கெடுபிடியால் 1.33 கோடி ரூபாயை விட்டுச் சென்ற கடத்தல்காரர்கள் !

 

சுங்கத்துறை கெடுபிடியால் 1.33 கோடி ரூபாயை விட்டுச் சென்ற கடத்தல்காரர்கள் !

சுங்கத்துறை சோதனைக்கு பயந்து சுமார் ஒன்றரை கோடி மதிப்பு தங்கத்தை விமானத்தில் விட்டு விட்டு சென்ற சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சென்னை வந்தடைந்தது. விமானம் வந்தவுடன் பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனர்.

சுங்கத்துறை சோதனைக்கு பயந்து சுமார் ஒன்றரை கோடி மதிப்பு தங்கத்தை விமானத்தில் விட்டு விட்டு சென்ற சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சென்னை வந்தடைந்தது. விமானம் வந்தவுடன் பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனர். அப்போது விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது கேட்பாரற்று ஒரு பை கிடந்துள்ளது. அதை பணியாளர்கள் பார்த்தபோது பார்சல்கள் சில இருந்துள்ளது. ஒருவேளை வெடிகுண்டு ஏதேனும் இருக்குமோ என்று பயந்து போன துப்புரவு பணியாளர்கள் விமான நிலைய மேலாளருக்கு தகவல் அளித்தனர். பின்னர் பாதுகாப்பு படையினர் வந்து மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்ததில் அதில் இருப்பது தங்கம் என்பதை உறுதி செய்தனர்.

gold

பின்னர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்து அந்த பையில் இருந்த 3 கிலோ 365 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 1.33 கோடி ரூபாய் ஆகும். இதை அடுத்து தங்கத்தை கடத்தி வந்து விட்டுச் சென்றது யார் என விமான நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றன. ஒருவேளை விமானத்தில் தங்கத்தை வைத்துவிட்டு வந்தால் அதை வெளியில் கொண்டு சொல்ல ஊழியர்கள் யாரேனும் உதவுகிறார்களா என்ற கோணத்திலும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.