சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. அதிர்ச்சியில் வாகன் ஓட்டிகள்!

 

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. அதிர்ச்சியில் வாகன் ஓட்டிகள்!

கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து தொழில் நிறுவனங்களும் முடங்கியுள்ளதால், இன்று முதல் ஊரடங்கின் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. 

ttn

ஊரடங்கு உத்தரவினால், அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வாகனங்கள் இயங்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அதே போல, சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதனையடுத்து, திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் மொத்தம் 26 சுங்கச் சாவடிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன. 

வழக்கமாக ஏப்ரல் மாதம் புதிய கட்டணம் வசூலிக்கப்படும். அதன் படி,  சேலம் – உளுந் தூர் பேட்டை- மேட்டுப்பட்டி, திண்டிவனம் – உளுந்தூர்பேட்டை, நல்லூர் – சென்னை, திருச்சி – திண்டுக்கல் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் 20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு புதிய கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு முன்னர், கட்டணம் உயர்த்தப்பட்டது, வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.