சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரம் – ‘பூராடம்’ பொதுப் பலன்கள்

 

சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரம் – ‘பூராடம்’ பொதுப் பலன்கள்

சுக்கிரனின் அம்சமாக பூராட நட்சத்திரம் விளங்குகிறது. பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுதல், உண்மையே பேசுதல், கல்வியின் மீது நாட்டம் ஆகியவற்றை ஒருங்கே பெற்றவர்களாக பூராட நட்சத்திரக்காரர்கள் திகழ்வார்கள்.

சுக்கிரனின் அம்சமாக பூராட நட்சத்திரம் விளங்குகிறது. பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுதல், உண்மையே பேசுதல், கல்வியின் மீது நாட்டம் ஆகியவற்றை ஒருங்கே பெற்றவர்களாக பூராட நட்சத்திரக்காரர்கள் திகழ்வார்கள்.

எல்லா வசதி வாய்ப்புகளையும் இளமையிலேயே பெறக் கூடியவர்களாக இருப்பார்கள். எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தக் கூடியவர்களாகவும், அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் பூராடம் நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள். இறங்கிய காரியத்தில் எப்படியாயினும் போராடி முடித்துக் காட்டுபவர்களாகவும், பிரச்னைகளைத் துணிச்சலாக எதிர்கொள்பவர்களாகவும் இருப்பார்கள். தாயிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்கள். அமைதியை விரும்புவார்கள். புதிய ஆடை அல்லது ஆபரணங்களை அணிவதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அனைத்து விஷயங்களிலும் நன்கு ஆராய்ந்து பார்த்த பிறகே முடிவுக்கு வருவார்கள்.

ttn

பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அமைதியை மிகவும் விரும்புபவர்கள். இயற்கை காட்சிகளை கண்டால் மனதைப் பறிகொடுப்பார்கள். அனைவரிடமும் மனம் விட்டு பேசக் கூடியவர்கள். சிறு வயதிலிருந்தே ஓவியத்தில் இவர்களுக்கு ஈடுபாடு அதிகம் உண்டு. வாகனத்தில் வேகமாக ஊர் சுற்றி வருவதை விரும்புவார்கள். பொது நலச் சிந்தனை கொண்ட பூராட நட்சத்திரக்காரர்கள் நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சுதந்திரமாகச் செயல்படவேண்டும் என்று பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விரும்புவார்கள். சுத்தம், சுகாதாரம் இவர்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் ஆகும். சமூக சேவை செய்வதில் அதிக ஆர்வமுள்ளவர்களாக திகழ்வார்கள். எந்த வேலையிலும் தங்கள் திறமை முழுவதையும் பயன்படுத்தி மிகச் சிறப்பாகச் செய்து மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவார்கள். பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவரையும் காந்தம் மாதிரி ஈர்ப்பார்கள். எல்லோரிடத்திலும் சரிசமமாகப் பழகுவார்கள். எதையும் சட்டென புரிந்து அதை கிரகித்துக் கொள்ளக் கூடிய கற்பூர புத்தி கொண்டவர்கள்.