சுகாதார பணியாளர்களை ஊக்குவித்த தெலுங்கு சிறுமியை கவுரவித்த ட்ரம்ப்

 

சுகாதார பணியாளர்களை ஊக்குவித்த தெலுங்கு சிறுமியை கவுரவித்த ட்ரம்ப்

சுகாதார பணியாளர்களை ஊக்குவித்த தெலுங்கு சிறுமியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கவுரவித்துள்ளார்.

வாஷிங்டன்: சுகாதார பணியாளர்களை ஊக்குவித்த தெலுங்கு சிறுமியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கவுரவித்துள்ளார்.

அமெரிக்காவில் பிறந்த 10 வயது தெலுங்கு சிறுமி ஸ்ரவ்யா அன்னபரேடி. அவரும் அவரது சக சாரண இயக்க சிறுமிகளும் கொரோனாவுக்கு எதிராக முன்னணியில் நின்று போராடி வரும் உள்ளூர் தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 100 பெட்டிகளில் பிஸ்கட்களை நன்கொடையாக வழங்கினார். மேலும் சுகாதார பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பி ஊக்குவித்தனர்.

இந்த சிறுமிகளின் செயல் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து அந்த சிறுமிகளை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பாராட்டி அவர்களை கவுரவம் செய்யும் விதமாக பரிசுகளை ட்ரம்ப் வழங்கினார்.

ttn

அப்போது ட்ரம்ப் பேசுகையில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் அமெரிக்கர்களின் வீரம், துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் அன்பு ஆகியவற்றைப் நினைத்து பிரமிப்பாக இருப்பதாக கூறியதாக மேரிலாந்தில் வசிக்கும் ஸ்ரவ்யாவின் தந்தை விஜய் ரெட்டி அன்னப்பரேடி கூறினார். இவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு. விஜய் ரெட்டி, ஸ்ராவ்யா எப்போதுமே சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர் என்றும், அவரது சகோதரர் அவிவ் அன்னப்பரேட்டியுடன் சேர்ந்து பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்கு மிகவும் தீவிரமாக முன்வந்து வருகிறார் என்றும் கூறினார். “வெள்ளை மாளிகையில் இருந்து அங்கீகாரம் முற்றிலும் எதிர்பாராதது, இது அவரது வாழ்க்கையிலும் சமூகத்திற்காக மேலும் செய்ய வேண்டும் என்ற அவரது லட்சியத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று அவர் மேலும் கூறினார். அதுமட்டுமின்றி ஸ்ரவ்யாவின் பெற்றோர், ஆந்திராவின் ராமநாயபாலத்தில் ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்காகவும் 25 லட்சம் நன்கொடை அளித்துள்ளனர்.