சுகாதார கழிப்பிடம் இல்லாத பேருந்து நிலையம்! மூக்கைப் பொத்திக்கொண்டு செல்லும் அவலநிலை !

சுகாதார கழிப்பிடம் இல்லாத பேருந்து நிலையம்! மூக்கைப் பொத்திக்கொண்டு செல்லும் அவலநிலை !

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்தில் சுகாதார கழிப்பிட வசதியின்றி பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இங்கு செயல்படுத்தப்பட்ட நம்ம டாய்லெட் திட்டமும் தோல்வி அடைந்ததால் பெண்களும் இயற்கை உபாதைகளை கழிக்க அவதிப்பட்டு வருகின்றனர். 

மிக முக்கியமான வணிக நகரங்களில் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியும் ஒன்று என்பதை மறுக்க முடியாது. பரமக்குடி உழவர் சந்தை, தானிய மண்டிகள், அரிசி மண்டிகள் இங்கு அதிக அளவில் காணப்படுபவை. சுற்றுப்புற கிராம விவசாயிகள் தங்களது விளைபொருள்களை பரமக்குடி சந்தையில்தான் விற்பனை செய்து விட்டு செல்கின்றனர். இதனால் இதை வாங்குவதற்கு ஏராளமான வியாபாரிகள் பரமக்குடி வந்து செல்வது வழக்கம். 

paramakudi-bus-stand-01

ஆனால் இங்கு  வருபவர்களுக்கு இயற்கை உபாதைகள் கழிக்க போதிய கழிப்பிட வசதிகள் இல்லை. இதனால் இயற்கை உபாதை கழிக்க ஆளில்லா இடங்களை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி சார்பாக பேருந்து நிலையத்தில் நம்ம டாய்லெட் தொடர்ந்து பராமரிப்பு இல்லாமல் பயன்பாடின்றி கிடக்கிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நம்ம டாய்லெட்டிற்கென்று பிரத்யேக கழிவுநீர் தொட்டி இல்லாமல் கழிவுகள் சாக்கடையில் கலந்து செல்கிறது. இதனால் பேருந்து நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பரமக்குடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இதனை சரி செய்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.