சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் என்னை சந்தித்தார்: டிடிவி வீசும் அடுத்த குண்டு

 

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் என்னை சந்தித்தார்: டிடிவி வீசும் அடுத்த குண்டு

துணை முதல்வர் ஓபிஎஸ் தன்னை சந்தித்தாக கூறிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தன்னை சந்தித்ததாக கூறியுள்ளார்

சென்னை: துணை முதல்வர் ஓபிஎஸ் தன்னை சந்தித்தாக கூறிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தன்னை சந்தித்ததாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பலனிச்சமை தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க தன்னை சந்தித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தியதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சந்திப்பு நடந்தது உண்மை தான், ஆனால் ஆட்சி கவிழ்ப்பு சம்பந்தமாக எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஓபிஎஸ் விளக்கம் கொடுத்திருந்தார். சசிகலா குடும்பத்திற்கு எதிராக தாம் இன்று வரை தர்மயுத்தம் நடத்தி வருவதால், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே திட்டமிட்டு தினகரன் செயல்படுகிறார் எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

தமிழக அரசியல் களத்தில் தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தன்னை சந்தித்ததாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். நடைபயிற்சியின் போது தன்னை விஜயபாஸ்கர் சந்தித்ததாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

மேலும், நக்கீரன் கோபால் கைதை தான் வரவேற்பதாக தெரிவித்த அவர், எவ்வித ஆதாரமும் இல்லாமல் தனிநபர்கள் குறித்து செய்திகள் வெளியிடுவது தவறு என்றும் குறிப்பிட்டார்.