சுகாதாரத்துறை அமைச்சரை கிண்டலடித்து பதிவிட்ட அமமுக பிரமுகர் கைது- டிடிவி தினகரன் கண்டனம்!

 

சுகாதாரத்துறை அமைச்சரை கிண்டலடித்து பதிவிட்ட அமமுக பிரமுகர் கைது- டிடிவி தினகரன் கண்டனம்!

இதற்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அமமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துக்குமாரை போலீசார் கைது செய்து, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ttn

அந்த அறிக்கையில்,  கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி மூட்டைகளில் சுகாதாரத் துறை அமைச்சரின் படம் இடம் பெற்றிருந்தது பற்றி பொதுவெளியில் எல்லோராலும் பகிரப்பட்ட தகவலை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு முத்துக்குமார் அவர்களை காவல்துறையினர் அதிகாலை திடீரென கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

ttn

யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்லாத புகாரின் அடிப்படையில் எத்தனையோ ஆயிரம் பகிர்ந்த ஒரு பதிவுக்காக திரு முத்துக்குமாரை கைது செய்திருப்பது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது எந்த அளவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும்,  பழிவாங்கும் சிந்தனையோடும் ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள் என்பதை காட்டுகிறது. அதனால்தான் மக்களின் பாதுகாப்பு பணிக்கு கூட போதுமான காவலர்கள் இல்லாத இந்த நெருக்கடியான நேரத்தில் இதற்காக புதுக்கோட்டையிலிருந்து காவலர்களை விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி அவரை கைது செய்து இருக்கிறார்கள்.

ஆணவத்தின் உச்சகட்டத்தில் ஆட்டம் போடும் ஆட்சியாளர்களின் அரசியல் உள்நோக்கம் கொண்ட தூண்டுதலுக்கு இணங்கி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது காவல்துறையினரின் கண்ணியத்தைக் குலைத்து விடும் எனவே திரு முத்துக்குமாரை உடனடியாக உதவி செய்வதுடன் அவரது மீதான செயல்முறை பொய் வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.