சீ ..சீ ..என்று சொல்ல வைத்த zee job -olx  விளம்பரத்தால் “ஓ ” வென அழும் 91000 ரூபாய் இழந்த இளைஞர் – பெருகும் போலி வேலைவாய்ப்புகள்   

 

சீ ..சீ ..என்று சொல்ல வைத்த zee job -olx  விளம்பரத்தால் “ஓ ” வென அழும் 91000 ரூபாய் இழந்த இளைஞர் – பெருகும் போலி வேலைவாய்ப்புகள்   

இப்போதெல்லாம் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது போல அவர்களை பயன்படுத்தி பணம் சம்பாரிக்கும் போலியான நபர்களும் பெருகிவிட்டனர். .இணையத்திலும் ,சாலைகளிலும்  இது போல பல போலியான  விளம்பரங்களை கண்டு நாளுக்கு நாள் ஏமாறுவோர் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது

இப்போதெல்லாம் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது போல அவர்களை பயன்படுத்தி பணம் சம்பாரிக்கும் போலியான நபர்களும் பெருகிவிட்டனர். .இணையத்திலும் ,சாலைகளிலும்  இது போல பல போலியான  விளம்பரங்களை கண்டு நாளுக்கு நாள் ஏமாறுவோர் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. 

பெங்களூரு ,அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் தான் olxல்  வந்த போலியான வேலைவாய்ப்பு விளம்பரத்தால் 91000 இழந்ததாக புகார் கொடுத்துள்ளார் .
அசோக்நகர் பகுதியை சேர்ந்த ஆனந்தா என்ற 20 வயது வேலையில்லா பட்டதாரி olx ல் வந்த zee entertainment வேலை வாய்ப்பு விளம்பரத்தை கண்டு டிசம்பர் 21 ன் தேதி வேலைக்கு மனு செய்தார் .சில நாள் கழித்து அந்த கம்பெனி HR ப்ரதாம் பேசுவதாக ஒருவர் ஆனந்தாவை தொடர்பு  கொண்டு, நீங்கள் வேலைக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளீர்கள் அதனால் உடனே செக்யூரிட்டி டெபாசிட் 91000 ரூபாய் கட்டவேண்டும் ,இந்த பணம் வேலைக்கு சேர்ந்ததும் உங்களுக்கு திருப்பி தரப்படுமென கூறி ஒரு அக்கௌண்டுக்கு பணத்தை அனுப்ப சொன்னார் .அதை நம்பிய ஆனந்தாவும் பணத்தை அனுப்பி விட்டு வேலைக்கு ஆர்டர் வருமென காத்திருந்தார் ,ஆனால் ஆர்டர் வராதத்தால் ஏமாந்த ஆனந்தன் ஜீ நிறுவனத்தை  தொடர்பு கொண்டு கேட்ட போது தாங்கள் அப்படி ஒரு விளம்பரம் தரவில்லையென மேனேஜர் விக்ரம் மகேஷ் பால் தெரிவித்தார் ,உடனே olx நிறுவனத்தை தொடர்பு கொண்டு அந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தை எடுக்க சொன்னார் .மேலும் 91000 ரூபாய் இழந்த ஆனந்தன், ப்ரதாம் என்ற நபர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார் .போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர் .