சீஸ் தினமாம்! நாவூரும் சுவையைக் கொடுக்கும் சீஸை கொண்டாடுவோம்… 

 

சீஸ் தினமாம்! நாவூரும் சுவையைக் கொடுக்கும் சீஸை கொண்டாடுவோம்… 

நாவூரும் சுவையைக் கொடுக்ககூடிய சீஸை கொண்டாடக்கூடிய சீஸ் தினம் இன்று. சீஸ் என அழைக்கப்படும் பாலடைக்கட்டி உடலுக்கு நன்மையை கொடுக்குமா? அதன் பூர்வீகம் எது என்பது குறித்து பார்க்கலாம். 

நாவூரும் சுவையைக் கொடுக்ககூடிய சீஸை கொண்டாடக்கூடிய சீஸ் தினம் இன்று. சீஸ் என அழைக்கப்படும் பாலடைக்கட்டி உடலுக்கு நன்மையை கொடுக்குமா? அதன் பூர்வீகம் எது என்பது குறித்து பார்க்கலாம். 

லத்தீன் மொழியில் சீஸ். தமிழில் பாலாடைக்கட்டி. சொல்லும்போதே நாவில் நீர் ஊற வைக்கும் உணவுப் பொருள். சீஸின் பூர்வீகம் எகிப்து என கூறப்படுகிறது. ஏனெனில் எந்தவொரு பொருட்களையும் பதப்படுத்தி வைக்கும் பெருமை எகிப்தியர்களையே சேரும். சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய சீஸ் தமிழர்களுக்கு சமீபத்தில் தோன்றிய வார்த்தையே. பெரிய பெரிய ஜாடிகளில் பசு மற்றும் ஆட்டின் பாலை பதப்படுத்தி வைத்து மேலை நாடுகளில் உபயோகப்படுத்தியுள்ளனர். 

CHEESE

சீஸ் பாலிலிருந்து தயாரிக்கப்படுவதால் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்களுக்கு இதில் பஞ்சமில்லை. இருந்தாலும் இதில் கொழுப்புச்சத்தும் அதிகம் என்பதால், அளவோடு பயன்படுத்துவது நல்லது.  குழந்தைகள், கற்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தினமும் 10 கிராம் வரை சீஸை எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். முக்கியமாக 40 வயதிற்கு மேலானவர்கள் சீஸ்-க்கு ஒரு பைபை சொல்வது நல்லது. எனினும், பீட்சாவிலும், சாண்ட்விச்சிலும், பாஸ்தாவின் மீதும், தோசையின் மீதும் சீஸை வைத்து சாப்பிடுவது இன்றைய இளசுகளின் உணவுப்பழக்கமாக உள்ளது. சீஸ் இதயத்திற்கும், மூளைக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது. உடலுக்கு மட்டுமல்லாது தோலுக்கும் சீஸ் நல்ல பளபளப்பை கொடுக்கிறது. அளவோடு சாப்பிட்டால் அனைத்தும் ஆரோக்கியம் என்ற வார்த்தைகளுக்கு சீஸ் ஒரு உதாரணம்.