சீமான் மீது தேச துரோக வழக்கு… கோவை போலீஸ் அதிரடி

 

சீமான் மீது தேச துரோக வழக்கு… கோவை போலீஸ் அதிரடி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்குநேரி தேர்தலின்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் மீது கோவை குனியமுத்தூர் போலீஸ் தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்குநேரி தேர்தலின்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.  சர்ச்சையான வகையில் பேசியதாக பல வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

seeman-56.jpg

கோயமுத்தூர் மாவட்டம் ஆத்துப்பாலம் பகுதியில் பிப்ரவரி 22ம் தேதி நடந்த ஷாகின்பாக் போன்ற போராட்டத்தில் பங்கேற்று சீமான் பேசினார். அப்போது வெறுப்பு உணர்வைத் தூண்டும் வகையில் சீமான் பேசியதாக புகார் கூறப்பட்டது. அந்த புகார் மனுமீது குனியமுத்தூர் போலீஸ் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. சீமான் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராகவும் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசியதாலும் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் விற்பனையை கண்காணிக்க ஒழுங்குபடுத்த போலீஸ் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக சீமான் கருத்து கூறியிருந்த நிலையில் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.