சீமான் இயக்கத்தில் சிம்பு?

 

சீமான் இயக்கத்தில் சிம்பு?

நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக தயாராகி வருகிறது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அரசியல் சார்ந்த காமெடி ஆக்‌ஷன் திரைப்படமாக ‘மாநாடு’ உருவாகவுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் பணிகளை சிம்பு விரைவில் தொடங்கவுள்ளார். இந்நிலையில், சிம்பு நடிக்கவுள்ள அடுத்தப்படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

simbu

பிரபல திரைப்பட இயக்குநரும், அரசியல்வாதியுமான சீமான், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படம் எடுக்கவுள்ளார். சீமானின் கம்பேக் படமாக இருக்கும் இப்படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இதில் சிம்பு மருத்துவராக நடிப்பதாகவும், மருத்துவத்துறையில் நடக்கும் சம்பவங்களை அரசியல் கலந்து இப்படத்தில் கூறவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.