‘சீமான் அண்ணா’ என்று அதிரவைத்த ராகவா லாரன்ஸ்… ஏன் இந்த மன மாற்றம்?

‘சீமான் அண்ணா’ என்று அதிரவைத்த ராகவா லாரன்ஸ்… ஏன் இந்த மன மாற்றம்?

தர்பார் பாடல் வெளியீட்டு விழாவில் பெயரைக் கூறக்கூட விரும்பவில்லை என்ற ராகவா லாரன்ஸ் ரஜினி பிறந்த நாள் விழாவில் சீமான் அண்ணா என்று அழைத்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
கடந்த வாரம் தர்பார் பட பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அப்போது நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் பேசியது நாம் தமிழர் கட்சித் தொண்டர்களை கொந்தளிக்க வைத்தது. இதற்கு சீமான் பதிலடி கொடுக்க, தொண்டர்கள் சமூக ஊடகங்களில் கொந்தளிக்க… இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றிக்கொண்டே சென்றது. 

lawrence

இந்தநிலையில் கடந்த 12ம் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. இதில் நடிகை மீனா, பி.வாசு, ராகவா லாரன்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். சீமானுக்கும் ராகவா லாரன்சுக்கும் இடையே வார்த்தைப் போர் நீண்டுவருவதால் இந்த நிகழ்ச்சி முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
ராகவா லாரன்ஸ் பேசும்போது, “தமிழ் நாட்டு அரசியலில் ஒருவர் உள்ளார். தான் மட்டும்தான் தமிழ்த்தாயின் மூத்தபிள்ளை என்கிறார். அப்படியென்றால் நாங்கள் எல்லாம் அமெரிக்காக்காரனுக்கா பிறந்தோம்?. யாரும் அரசியலுக்கு வரக்கூடாது, நான் மட்டும்தான் களத்தில் நிற்பேன் என்கிறார். இது என் வீடு, எங்கே நட்டு, போல்டு வீக்காக இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அனைவரையும் ஓடவிட்டு அதில் யார் வெற்றிபெறுகிறாரோ அவர்தான் உண்மையான ஆண்மகன். யாருமே ஓடக்கூடாது என்று கூறி ஓட்டப்பந்தையத்தில் வெற்றிபெற நினைப்பதை என்ன என்று சொல்வது?” என்று சீமானைப் பற்றி சூடாக பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் “சீமான் அண்ணா” என்று பெயரை சொன்னார். உடனே சீமானுக்கு எதிராக குரல்கள் எழுந்தன. சுதாரித்துக்கொண்ட ராகவா லாரன்ஸ், “இனி அந்த பெயரை சொல்லமாட்டேன்” என்றதும் தான் கூட்டம் அமைதியானது. 

seeman and lawrence

இதுநாள் வரைக்கும் பெயரைக் கூற மாட்டேன் என்று சொல்லிய ராகவா லாரன்ஸ் திடீரென்று அண்ணா என்று அழைப்பது ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. இதற்கான பதிலை அவரே தொடர்ந்து பேசும்போது வெளிப்படுத்தினார்.
“அவருக்கு ஒரே ஒரு கோரிக்கைதான். அரசியல் பேசுங்கள்… அரசியல் ரீதியாக விமர்சியுங்கள். ஆனால் தனிமனித தாக்குதல் வேண்டாம். நாகரீகமாக பேசுங்கள். நாங்கள் தர்மத்தின் பக்கம் நிற்கிறோம். நீங்கள் உங்கள் அதர்மத்தைக் கைவிட வேண்டும். என்னைப் பற்றி அசிங்கமாக பேசுகிறார்கள். நான் காசிமேட்டில் பிறந்தவன். உங்களைவிட எனக்கு அசிங்கமாக பேசத் தெரியும்… வேண்டாம்…” என்றார்.