சீமராஜா இயக்குனருடன் கைகோர்த்த சசிகுமார் 

 

சீமராஜா இயக்குனருடன் கைகோர்த்த சசிகுமார் 

sasikumar

இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இப்போது கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், எனை நோக்கி பாயும் தோட்டா, பரமகுரு ஆகிய படங்களில்  நடித்து வருகிறார். இந்த வருடம் அவர் நடிப்பில் பேட்ட மற்றும் கென்னடி கிளப் என இரு படங்கள் வெளிவந்துவிட்டன.

ponram

சீமராஜா படத்திற்கு பிறகு இயக்குனர் பொன்ராம் சசிகுமாரை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார்.இந்த படத்தின் கதை கிராமத்து பின்னணியில் இருக்கும் எனவும்  படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிப்பவருக்கான தேர்வு நடந்து வருகிறது.

விரைவில் படம் குறித்து அறிவிப்பு வெளியாகும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.