சீன ஆன்லைனின் சில்லித்தனம்-நைக் ஷூ வுக்குப்பதில் நைந்து போன ஷூ … 

 

சீன ஆன்லைனின் சில்லித்தனம்-நைக் ஷூ வுக்குப்பதில் நைந்து போன ஷூ … 

பெங்களூரு பசவேஸ்வர நகர் பகுதியை சேர்ந்த35 வயதான  ரவி மஹாதேவ் என்ற வக்கீல் குமாஸ்தா ,ஒரு சீன ஆன்லைனில் nike ஷூ வும், இந்துலேகா ஹேர் ஆயிலும் ,கூலிங் க்ளாஸும் ஜனவரி 15 ன் தேதி ஆர்டர் செய்தார்

பெங்களூருவில் ஒரு வக்கீல் ஆபிசில் வேலை பார்க்கும் ஒருவர் சீன ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களுக்கு எல்லாமே போலியாக அனுப்பி அவரிடமிருந்து  பணத்தை ஆட்டையை போட்டனர் .

பெங்களூரு பசவேஸ்வர நகர் பகுதியை சேர்ந்த35 வயதான ரவி மஹாதேவ் என்ற வக்கீல் குமாஸ்தா, ஒரு சீன ஆன்லைனில் nike ஷூவும், இந்துலேகா ஹேர் ஆயிலும் ,கூலிங் க்ளாஸும் ஜனவரி 15 ன் தேதி ஆர்டர் செய்தார்.
ஆனால் அவர் செய்த ஆர்டருக்கு பதிலாக அவருக்கு எல்லாமே போலியான பொருட்கள் டெலிவரி ஆனது .அதற்கான பில் தொகையான் 3103 ரூபாயை அந்த நிறுவனம் வசூல் செய்தது.அந்த போலியான பொருட்களை பார்த்து கடுப்பான ரவி அந்த நிறுனத்தின் கஸ்டமர் கேரில் புகாரளித்தார் .ஆனால் சரியான பதில் கிடைக்காத ரவி அந்த பகுதி போலீஸ் நிலையத்தில் அந்த நிறுனத்தின் மீது புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .