சீன அதிபர் வருவதால் சென்னை தூய்மையானது : சென்னை உயர்நீதி மன்றம் கருத்து..!

 

சீன அதிபர் வருவதால் சென்னை தூய்மையானது : சென்னை உயர்நீதி மன்றம் கருத்து..!

பேனர்கள் இன்னும் அகற்றப்படவில்லை என்றும் வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்றும் சுபஸ்ரீயின் தந்தை தரப்பு கூறப்பட்டுள்ளது. 

பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்ததற்கு இழப்பீடாக ஒரு கோடி ருபாய் வழங்க வேண்டும் என்று சுபஸ்ரீயின் தந்தை ரவி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் சரவணன் மற்றும் வைத்தியநாதன் தலைமையில் அமர்வுக்கு வந்தது. அப்போது பேனர்கள் இன்னும் அகற்றப்படவில்லை என்றும் வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்றும் சுபஸ்ரீயின் தந்தை தரப்பு கூறப்பட்டுள்ளது. 

Subashree

அதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு, ஜெயகோபால் மற்றும் அலட்சியமாக செயல்பட்ட திகரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தின் எந்த இடத்திலும் பேனர் வைக்க அனுமதி வழங்கப் படவில்லை என்றும் சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு இடைக்கால நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப் பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. 

High court

இதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், சுபஸ்ரீயின் மரணத்தில் காற்றின் மீது தான் வழக்குப் போட வேண்டும் என்றும் சீன அதிபரின் வருகையால் சென்னை சுத்தமானது, வேறு தலைவர்கள் வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால நிதி வழங்கப்பட்ட நகல் கிடைத்ததும் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப் படும் என்று வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.