சீன அதிபர் வருகை: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் கடற்கரை மணலிலேயே படுத்துறங்கும் அவலம்!! 

 

சீன அதிபர் வருகை: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் கடற்கரை மணலிலேயே படுத்துறங்கும் அவலம்!! 

மோடி ,சீன அதிபர் சந்திப்பு , மாமல்லபுரம் பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர்கள் கடற்கரை மணலிலேயே படுத்துறங்கும் காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மோடி ,சீன அதிபர் சந்திப்பு , மாமல்லபுரம் பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர்கள் கடற்கரை மணலிலேயே படுத்துறங்கும் காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வருகை தர உள்ளனர். நாளை பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் சீன அதிபர். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு மற்றும் கலாசார முறைப்படி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களின் வருகையையொட்டி சென்னையே விழாக்கோலம் பூண்டுள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் தூய்மை பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

Police

இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்-பிரதமர் மோடி வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிக்காக சென்னை போலீசார் மட்டுமின்றி தருமபுரி, சேலம், வேலூர், விழுப்புரம் மற்றும் மதுரையில் இருந்தும் மாமல்லபுரத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் கடற்கரை மணலிலேயே படுத்துறங்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

பாதுகாப்பு பணியில் 34 அதிகாரிகள், 10 சிறப்பு அதிகாரிகள், 10 பொறுப்பு அதிகாரிகள் மற்றும் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்து தலைமை செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார். இருநாட்டு தலைவர்களும் வந்து செல்லும் பகுதிகளில் சிறப்பு பணியில் நியமிக்கப்படும் இந்த அதிகாரிகளுக்கு தங்குவதற்கு சிறு குடிசையோ, கழிவறை வசதியோ இல்லாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் சாலை ஒரங்களிலும், கடற்கரை மணலிலும் படுத்து எழுந்து ,காலைக் கடன்களை கழித்து, உணவுக்கும் தண்ணீருக்கும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உயர் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் காவலர்களுக்கு மட்டுமல்ல சமூக ஆர்வலர்களுக்கும் பெரும் கவலையாகவுள்ளது.