சீன அதிபரையும், பிரதமர் மோடியையும் தமிழக மக்கள் உற்சாக வரவேற்க வேண்டும்- முதலமைச்சர் பழனிசாமி! 

சீன அதிபரையும், பிரதமர் மோடியையும் தமிழக மக்கள் உற்சாக வரவேற்க வேண்டும்- முதலமைச்சர் பழனிசாமி! 

இந்தியாவிற்கு வருகை தரும் சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பு வரும் 11 முதல் 13 வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாமல்லபுரம் நகரமே விழாகோலம் பூண்டுள்ளது. 

Modi- xi

இந்நிலையில் மிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்திற்கு வருகைத் தரும் சீன அதிபர் ஜின்பிங்கிற்கு, தமிழக மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். பல்லவ நாட்டின் துறைமுகமாக இருந்த மாமல்லபுரம் தேர்வு செய்தது பொருத்தமாக இருக்கும். இருநாட்டு தலைவர்களின் சந்திப்பிற்கு தமிழகத்தை தேர்ந்தெடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சீனா, தமிழகம் இடையே வணிக, கலாச்சார தொடர்பு இருந்து வந்தது. இரு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதால் தமிழகத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.