சீன அதிபருக்கு பிரதமர் மோடி விருந்து.. ரஜினிக்கும் அழைப்பு!

 

சீன அதிபருக்கு பிரதமர் மோடி விருந்து.. ரஜினிக்கும் அழைப்பு!

சீன அதிபர் ஜி ஜின்பிங் க்கு பிரதமர் மோடி அளிக்கும் விருந்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்கும் அழைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வருகை தர உள்ளனர். செப்டம்பர் 11ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் சீன அதிபர். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு மற்றும் கலாசார முறைப்படி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Rajini with modi

இதையடுத்து பிரதமர் மோடி, அதிபர் ஜி ஜின்பிங்க்கு சிறப்பு விருந்து அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். அவர்களுடன் நடிகர் ரஜினிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ரஜினியும் இந்த விருந்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் 2.0 படம் சமீபத்தில் தான் வெளியானது குறிப்பிடதக்கது.