சீன அதிபரின் மாமல்லபுர பயண விவரங்கள் வெளியீடு..!

 

சீன அதிபரின் மாமல்லபுர பயண விவரங்கள் வெளியீடு..!

 சீன அதிபரின் பயண விவரங்கள் உங்களுக்காக இதோ…

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வரும் 11 மற்றும் 12 ஆம் தேதி மாமல்லபுரத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தவிருக்கின்றனர். இரு நாடு அதிபர்களின் வரவேற்பை முன்னிட்டு மாமல்லபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப் பட்டு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

இந்த மாபெரும் நிகழ்வு நாளை நடக்கவிருப்பதால், இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இரு நாட்டுத் தலைவர்களின் பயண விவரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. சீன அதிபரின் பயண விவரங்கள் உங்களுக்காக இதோ…

China president

சீன அதிபரின் பயண விவரங்கள்: நாள் ஒன்று (11.10.2019):

நண்பகல் 01.30 மணி:  ஏர் சீனா ( AIR CHINA ) விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

நண்பகல் 01.45 மணி: பிரத்தியேக ஹான்கி எல் 9 சீரியஸ் வாகனம் மூலம் 5 அல்லது 6 வது நுழைவு வாயில் வழியாக கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு புறப்படுகிறார்.

நண்பகல் 02.05 மணி: கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர விடுதி வந்தடைகிறார்.

மாலை 04.00 மணி: பிரத்தியேக ஹான்கி எல் 9 சீரியஸ் வாகனம் மூலம் மாமல்லபுரம் புறப்படுகிறார்.

மாலை 04.55 மணி: 55 நிமிட பயணத்திற்கு பின்னர் மாமல்லபுரம் வந்தடைகிறார்.

இரவு 08.05 மணி: மாமல்லபுரத்தில் இருந்து கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு புறப்படுகிறார்.

இரவு 09.00 மணி : 55 நிமிட பயணத்திற்கு பின்னர் கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர விடுதி வந்தடைகிறார்.

China president

சீன அதிபரின் பயண விவரங்கள்: நாள் இரண்டு  (12.10.2019):

காலை 09.05 மணி:கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் இருந்து, இந்திய பிரதமர் தங்கியுள்ள கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் விடுதிக்கு புறப்படுகிறார்.

காலை 09.45 மணி:மாமல்லபுரம் அருகே உள்ள கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் விடுதி வந்தடைகிறார்.

நண்பகல் 12.45 மணி:கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன் கோவ் விடுதியில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் புறப்படுகிறார்.

நண்பகல் 01.30 மணி: ஏர் சீனா விமானம் மூலம் சீனா புறப்படுகிறார் அதிபர் ஜி ஜின்பிங்