சீனியர்களுக்கு கெட் அவுட்…தி.மு.க. இளைஞர் அணியில் இடம்பெறப்போகும் நடிகர், நடிகைகள்…

 

சீனியர்களுக்கு கெட் அவுட்…தி.மு.க. இளைஞர் அணியில் இடம்பெறப்போகும் நடிகர், நடிகைகள்…

திமுக இளைஞரணியின் செயலாளரான உதயநிதிக்கு இப்போது 41 வயதாகிறது.

தி.மு.கவின் இளைஞரணித் தலைவராக அண்மையில் முடி சூடிக்கொண்ட மூன்றாம் கலைஞர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியை மெய்யாலுமே இளஞரணியாக மாற்றுவதற்காக தமிழகமெங்குமுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அத்தனை பேருக்கும் கெட் அவுட் சொல்லிவிட்டு புதுரத்தம் பாய்ச்சவிருப்பதாக அன்பாலய வட்டாரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

stalin

திமுக இளைஞரணியின் செயலாளரான உதயநிதிக்கு இப்போது 41 வயதாகிறது. மாநில துணைச் செயலாளர்களாக ஆர்.டி.சேகர், அன்பில் மகேஷ், பைந்தமிழ் பாரி, ஜோயல், தாயகம் கவி, உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் உதயநிதியை விட வயதில் மூத்தவர்கள். சிலர் மிகவும் சீனியர்கள். குறிப்பாக ஏற்கனவே இளைஞரணியிலிருந்த ஜெயங்கொண்டம் சுபா சந்திரசேகர் மிகவும் சீனியர். அவர் அன்பில் பொய்யாமொழி காலத்திலேயே இளைஞரணியிலிருந்தார். இப்போது அன்பில் மகேஷ் காலத்திலும் இளைஞரணியில் இருந்து வந்தார். உதயநிதி நியமனத்தின்போதுதான், அவர் சட்டத் திருத்த தீர்மானக் குழு உறுப்பினராக மாற்றப்பட்டார்.

udhay

மிகவும் சீனியர்கள் இளைஞரணியிலிருந்தால் உதயநிதியின் கீழ் அவர்கள் செயல்பட வேண்டும். இது உதயநிதிக்கும் சங்கடமாக இருக்கும், அவர்களுக்கும் நெருடலை ஏற்படுத்தக் கூடும் என்பதால்தான் சுபா சந்திரசேகர் சட்டத் திருத்த தீர்மானக் குழுவுக்கு மாற்றப்பட்டார். தவிர உதயநிதி தனக்கென தன் வயதை ஒட்டிய இளைஞர்கள் தன்னுடன் இருந்தால் முடிவெடுக்கவும், அதைச் செயல்படுத்தவும் ஏதுவாக இருக்கும் என்று கணக்குப் போடுகிறார். அந்த வகையில் மாவட்ட அமைப்பாளர்களில் சிலரை மாநில அளவு பொறுப்புக்குக் கொண்டுவரவும் திட்டமிட்டிருக்கிறார். அதற்கான ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இளைஞரணியின் மாநில நிர்வாகிகள் முழுக்க முழுக்க உதயநிதி டீம் என்ற அளவுக்கு மாறுதலுக்கு ஆளாகும் வாய்ப்பிருக்கிறது.

 

இதில் தன்னால் வெளியேற்றப்படும் சீனியர்களின் சினத்தைக் கண்ட்ரோல் பண்ணி அவர்களுக்கு வேறு பதவி வழங்கும் பொறுப்பை தந்தை ஸ்டாலிடம் வழங்கியுள்ள உதயநிதி, இளைஞரணிக்கு தனக்கு நெருக்கமான,விசுவாசமான சினிமா நட்சத்திரங்களைக் கொண்டுவரவும் ஆலோசித்துவருகிறாராம்.