சீனா மார்க்கமாக சென்னை வந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல்? – ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

 

சீனா மார்க்கமாக சென்னை வந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல்? – ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

ஹாங்காங்கில் இருந்து சீனா வழியாக வந்த சென்னை பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டது.

சென்னை: ஹாங்காங்கில் இருந்து சீனா வழியாக வந்த சென்னை பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டது.

சீனாவில் உருவாகி உலகம் முழுக்க பேராபத்தாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 3000-க்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியாவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஹாங்காங்கில் இருந்து சீனா வழியாக நேற்று முன்தினம் சென்னை வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தாம்பரம் சேலையூரை சேர்ந்த சிட்டாள் (வயது 40) என்ற பெண் வந்தார். சீனாவில் இருந்தோ அல்லது சீனா வழியாகவோ வரும் பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் கடும் பரிசோதனைகள் செய்த பிறகே வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், விமான நிலையத்தில் சிட்டாளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

ஆனால் வீட்டுக்கு சென்ற பிறகு சிட்டாளுக்கு நேற்று காலை திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக சென்றார். சீனா வழியாக சிட்டாள் சென்னை வந்ததை அறிந்ததும் அவருக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகமடைந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவரை  அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அங்கு அவரை பரிசோதித்த பின்பு சிட்டாளுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்த எந்த அறிகுறியும் அவருக்கு இல்லை என தெரியவந்துள்ளது. அவருக்கு வந்திருப்பது சாதாரண காய்ச்சல்தான் என்றாலும், ஒரு சில நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் வைக்கப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.