சீனா பாகிஸ்தானை கைவிட்டது ஏன், பின்னணி இதுதான்?!

 

சீனா பாகிஸ்தானை கைவிட்டது ஏன், பின்னணி இதுதான்?!

தான் என்ன செய்தாலும் சீனா தன்னை ஆதரிக்கும் என்று பாகிஸ்தான் நம்பி இருந்தது

இஸ்லாமாபாத்: தான் என்ன செய்தாலும் சீனா தன்னை ஆதரிக்கும் என்று பாகிஸ்தான் நம்பி இருந்தது. ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை கைது செய்ய இந்தியா எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் சீனாதான் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இப்போது இந்தியா பாகிஸ்தான் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதைச் சீனா தீவிரமாக கண்டிக்காததும் பாகிஸ்தான் இறங்கிவர ஒரு காரணமாக பார்க்கப்படுகிறதது.முதல் காரணம் இந்தியாவின் பிரமாண்ட சந்தை.பாகிஸ்தானால் சீனாவுக்கு செலவு மட்டுமே மாறாக இந்தியர்களோ சீனப்பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள்.

abi ttn

இந்த சந்தையை இழக்க சீனா தயாரில்லை.இரண்டாவது காரணமாக பார்க்கப்படுவது சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு ‘ திட்டம்.இது ஒரு வர்த்தக சாலை அமைக்கும் திட்டம் சீனாவில் உலகின் முக்கிய சந்தைகளை ஒரு வலைப்பின்னல் போல இணைக்கவிருக்கும் இந்த சாலையை பெரும் பொருட் செலவில் அமைக்கிறது. இது ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியே செல்வதால் இந்தியா இந்தத் திட்டத்தை எதிர்க்கிறது.160 பில்லியன் டாலர் திட்ட மதிபீடு கொண்ட திட்டம் இது. 

imran khan ttn

கடந்த ஆண்டு இதற்காக சீனா கூட்டிய மாநாட்டில் அமெரிக்கா உட்பட 130 நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.ஆனால் இது தன் இறையாண்மை பாதிக்கப்படுவதாகக் கூறி மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்துவிட்டது.இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் பெல்ட் அண்ட் ரோடு மாநாட்டை நடத்தப்போகிறது சீனா.

army ttn

அந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதும் சாலை அமைப்பு பணிக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருப்பதும் சீனாவுக்கு முக்கியம் அதனால்தான் இந்தியாவின் எல்லை தாண்டிய விமான தாக்குதலைச் சீனா கண்டிக்கவில்லை.அதுமட்டுமல்ல இந்த விவகாரத்தில் தன்னிடமிருந்து உதவியோ ஆதரவோ எதிர்பார்க்க வேண்டாம் என்று சீனா பாகிஸ்தானிடம் கூறிவிடும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.