சீனா பற்றிய அதிர்ச்சி தரும் புகார் – அமெரிக்கா அறிவிப்பு

 

சீனா பற்றிய  அதிர்ச்சி தரும் புகார்  – அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்க தேர்தல் முடியும்வரை பல அதிர்ச்சி தரும் செய்திகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும் என்றே தெரிகிறது.

நவம்பர் மாதம் 3-ம் தேதி அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. நோய்த் தொற்று அதிகளவில் இருக்கும் சூழலில் தேர்தல் நடத்தப்படும் விதம் குறித்து பல கேள்விகளும் குழப்பங்களும் இன்னமும் நீடிக்கின்றன. ஏனெனில், உலகளவில் அதிக கொரோனா பாதிப்புள்ள நாடு அமெரிக்காதான்.

சீனா பற்றிய  அதிர்ச்சி தரும் புகார்  – அமெரிக்கா அறிவிப்பு

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராக போட்டியிடுகிறார்.  ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகக் களம் காண்கிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட  இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

ஜோபிடனை சீன ஆதரவாளராக முத்திரை குத்துவதும், கமலா ஹாரீஸின் குடியுரிமை குறித்த கேள்விகளை எழுப்புவதுமாக ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தில் சரவெடிகளைக் கொளுத்திப் போடுகிறார்.

சீனா பற்றிய  அதிர்ச்சி தரும் புகார்  – அமெரிக்கா அறிவிப்பு

இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு செயலாளர் ராபர்ட் ஓ பிரையன் சீனா உள்ளிட்ட மூன்று நாடுகளைப் பற்றி அதிரடியாக குற்றசாட்டுகளை முன் வைக்கிறார்.

சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளும் அமெரிக்க தேர்தலைச் சீர்குலைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன என்பதே ராபர்ட் ஓ பிரையன் சுமத்தும் புகார்கள்.

சீனா பற்றிய  அதிர்ச்சி தரும் புகார்  – அமெரிக்கா அறிவிப்பு

குறிப்பாக சீனா, அமெரிக்காவில் பெரும் இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் ஆன்லைன் வழியாக பல்வேறு முயற்சிகளை எடுப்பதாகவும் அதை அமெரிக்க துணிவோடு எதிர்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க தேர்தலில் இரண்டு விஷயங்கள் முதன்மை பேசுபொருளாகி விட்டன. ஒன்று, சீனா அரசின் அச்சுறுத்தல் அடுத்து கொரோனா வைரஸை எதிர்கொள்ளல். இரண்டையும் முன்னிருத்தியே ட்ரம்பின் தேர்தல் நடவடிக்கைகள் இருக்கின்றன………