சீனா-அமெரிக்கா இடையே வர்த்தகம் துண்டிப்பு?? காரணம் இதுதான்!!

சீனா-அமெரிக்கா இடையே வர்த்தகம் துண்டிப்பு?? காரணம் இதுதான்!!

ஹாங்காங் நாட்டில் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்களை சீனாவிற்கு நாடு கடத்தி அங்கு அவர்களை விசாரிக்கவும் தண்டனை கொடுக்கவும் ஏதுவாக, கைதிகள் பரிமாற்ற மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஆளும் அரசு முடிவு செய்துள்ளது.

சீனா-அமெரிக்கா இடையே வர்த்தகம் துண்டிப்பு?? காரணம் இதுதான்!!

ஹாங்காங்கில் வெடிக்கும் புரட்சிக்கு சீன அரசு அமைதியான முறையில் தீர்வு காணாமல் வன்முறையை கையாண்டால் அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதனால் சீனா-அமெரிக்கா இடையேயான வர்த்தகம் கடுமையாக பாதிக்கும் எனவும் கூறியுள்ளார்.

ஹாங்காங் நாட்டில் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்களை சீனாவிற்கு நாடு கடத்தி அங்கு அவர்களை விசாரிக்கவும் தண்டனை கொடுக்கவும் ஏதுவாக, கைதிகள் பரிமாற்ற மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஆளும் அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பும் போராட்டமும் நிலவி வருகிறது. கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்களை இதே நாட்டிலேயே வைத்து விசாரிப்பது தான் நீதித்துறையின் சரியான முடிவாக இருக்க முடியும். அவர்களை எப்படி வேறு நாட்டிற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க இயலும் என தொடர்ந்து மக்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். 

china and america

ஆனால் ஹாங்காங் அரசு சீனாவின் பக்கம் நின்று கொண்டு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இதனால் சீன அரசு தக்க நடவடிக்கையை விரைவில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் திடீரென அமெரிக்கா தலையிட்டுள்ளது. 

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், மக்களின் இந்த கடும் போராட்டத்தை சீன அரசு அமைதியான முறையில் கையாண்டு எவ்வித வன்முறையும் இல்லாமல் தீர்வு காணவில்லை என்றால் அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. நிச்சயம் தக்க நடவடிக்கை எடுக்கும். அதேபோல் இந்த வன்முறை சம்பவத்தினால் சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான அனைத்துவித வர்த்தகமும் துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய டிரம்ப், சீன அதிபர் மிகவும் திறம்பட செயல்பட கூடியவர். நல்ல ஆளுமையும் பெற்றவர். இவ்விவகாரத்தில் எப்படி அமைதியை நிலைநாட்டி தீர்வு காண வேண்டும் என்பதை அவர் நன்கு அறிந்திருப்பார் என நம்புகிறேன். மேலும் மக்கள் நலன் கருதி விரைவில் தீர்வு காண்பார் எனவும் எதிர்பார்க்கிறேன் என்றார்.