சீனா, அமெரிக்காவை தொடர்ந்து இப்போ பிரான்ஸிலும் கொரோனா வைரஸ் தாக்குதல்

 

சீனா, அமெரிக்காவை தொடர்ந்து இப்போ பிரான்ஸிலும் கொரோனா வைரஸ் தாக்குதல்

ஐரோப்பிய நாடான பிரான்ஸில் 3 பேர் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாரிஸ்: ஐரோப்பிய நாடான பிரான்ஸில் 3 பேர் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 41 பேர் பலியாகி உள்ளதாகவும், 1000-க்கும் மேற்பட்டோர் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்ஸில் 3 பேர் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரான்ஸ் மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா, மலேசியா நாடுகளும் தங்கள் முதல் கொரோனா வைரஸ் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளன.

virus

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தங்களது நாட்டுக்குள் புகுந்து விடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. வெளிநாட்டு பயணிகள் அனைவரையும் தீவிர மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தங்களது நாட்டுக்குள் அவர்களை அனுமதிக்கின்றன. மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு தகுந்த மருந்தைக் கண்டறியும் ஆய்வில் பல நாட்டு மருத்துவ நிபுணர்கள் மும்முரமாக களமிறங்கியுள்ளனர்.