சீனாவை முடக்கிய கொரோனா வைரஸ்! இந்தியாவில் பாராசிட்டமால் மாத்திரை விலை 40 சதவீதம் உயர்ந்தது….

 

சீனாவை முடக்கிய கொரோனா வைரஸ்! இந்தியாவில் பாராசிட்டமால் மாத்திரை விலை 40 சதவீதம் உயர்ந்தது….

கொரோனாவைரஸால் சீனாவின் தொழில்துறை முடங்கி கிடப்பதால், இந்தியாவில் பாராசிட்டமால் மாத்திரை விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளதாக முன்னணி மருந்து நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட இரண்டாவது பெரிய நாடாக நம் நாடு உள்ளது. சீனாவிலிருந்து நம் நாடு அதிகளவில் மருந்து, செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்கிறது. தற்போது சீனாவில் கொரோனாவைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அங்கு தொழில்துறை முடங்கி கிடக்கிறது. மருந்து முதல் மொபைல்போன்கள் உற்பத்தி நடைபெறாததால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான அந்நாட்டின் சப்ளை செயின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சைடஸ் காடிலா

அதன் தாக்கம் தற்போது இந்தியாவில் வெளிப்பட தொடங்கியுள்ளது. சாதரண காய்ச்சல், தலைவலி மற்றும் வலிநிவாரணி மருந்தான பாராசிட்டமால் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இது தொடர்பாக பிரபல மருந்து நிறுவனமான சைடஸ் காடிலா நிறுவனத்தின் தலைவர் ப    ங்கஜ் ஆர் படேல் கூறியதாவது: இந்தியாவில் வலிநிவாரணி மருந்தான பாராசிட்டமால் மருந்து விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. 

மருந்தகம்

மேலும், பல்வேறு வகையான பாக்டீரியா தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் அசித்ரோமைசின் என்ற ஆண்டிபயோடிக் விலை 70 சதவீதம் உயர்ந்துள்ளது. அடுத்த மாதத்தின் முதல் வாரத்துக்குள் சீனாவிலிருந்து சப்ளை மீண்டும் தொடங்கவில்லையென்றால், ஏப்ரல் முதல் முடிக்கப்பட்ட மருந்து கலவைகளுக்கு இந்திய மருந்து துறை பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும். குறுகிய முதல் நடுத்தர காலத்துக்கு மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மருந்து மூலப்பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்து வருவதை காண்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.