சீனாவை போன்று தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை கட்டவேண்டும் – அன்புமணி ராமதாஸ்

 

சீனாவை போன்று தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை கட்டவேண்டும் – அன்புமணி ராமதாஸ்

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து விட்டது. இதுவரை 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பலியானோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது.இதுவரை கொரோனா வைரசால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீனா, ஆறு நாட்களில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கட்டியது. 

coronavirus patient

இந்நிலையில் பாமக இளைஞரணித் தலைவர்  அன்புமணி ராம்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனி மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் நோய்ப்பரவலை தடுக்க முடிந்தது. தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவலைத் தடுக்கும் வகையில் கொரோனா நோயாளிகளுக்கு தனி மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கொரோனா வைரசை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும்  ஒத்துழைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.