சீனாவை தொடர்ந்து தென் கொரியாவையும் பதம் பார்த்த கொரோனா வைரஸ் – இதுவரை 8 பேர் உயிரிழப்பு

 

சீனாவை தொடர்ந்து தென் கொரியாவையும் பதம் பார்த்த கொரோனா வைரஸ் – இதுவரை 8 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் தென் கொரியாவில் இதுவரை 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சியோல்: கொரோனா வைரஸ் பாதிப்பால் தென் கொரியாவில் இதுவரை 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2663 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 71 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த இலையில், கொரோனா வைரஸ் தென் கொரியாவையும் பதம் பார்த்துள்ளது.

ttn

அந்நாட்டில் 893 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் அங்கு இதுவரை 8 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதனால் சீன மக்களை போலவே தென் கொரிய மக்களும் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். அத்துடன் தென் கொரியாவில் நடைபெற இருந்த கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்று கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகரித்துள்ளது. புதிதாக கண்டறியப்பட்டுள்ள 60 கொரோனா வைரஸ் பாதிப்புகளில் 49 பேர் டேகு மற்றும் வடக்கு கியோங்சாங் மாகாணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவாகியுள்ளது.